(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம், சமர்ப்பிக்கப்படும் தினம் உள்ளடங்கலாக 21 நாட்கள் இடம்பெறும், எனினும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தவறுதலாக 19 நாட்கள் விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை திருத்திக்கொள்ளுமாறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பொன்றை விடுத்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் சபாநாயகர் அறிவிப்பில் இதனைக்கூறினார்.

நேற்று 11 ஆம் திகதி  நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வரவுசெலவுத்திட்ட விவாதத்துக்கான தினங்கள் தீர்மானிக்கப்பட்டன.

எனினும் பாராளுமன்றத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் வரவுசெலவுத்திட்ட விவாதத்துக்கான தினங்கள் 19 என தவறுதலாகக் குறிப்பிடப்பட்டமையால், இன்றைய நாளிதழ்கள்   சிலவற்றில் வரவுசெலவுத்திட்ட விவாதம் 19 நாட்கள் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

எனவே பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வரவு செலவு திட்ட விவாதங்கள் 21 நாட்களுக்கு நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.