தீபாவளியை எவ்வாறு கொண்டாட வேண்டும் :  சுகாதார அமைச்சு தெரிவிப்பது என்ன ?

Published By: R. Kalaichelvan

12 Nov, 2020 | 04:07 PM
image

(நா.தனுஜா)

தீபாவளிப் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களை இந்து மதத் தலைவர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இம்முறை தீபாவளிப்பண்டிகையின் போது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் இந்து சமயத்தைப் பின்பற்றும் சமூகத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாளைய மறுதினம் தீபாவளிப்பண்டிகையை சுகாதாரப்பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாகக் கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அதன்படி முதலாவதாக பண்டிகையைக் கொண்டாடும் போது எவ்வகையிலும் வைரஸ் தொற்று ஏற்படாதவாறு அவதானமாக இருக்கவேண்டும். மக்கள் அதிகளவில் ஒன்றுகூடாமல், தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே இருக்கவேண்டும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை போன்ற வைரஸ் பரவல் தொடர்பான உயர் அச்சம் நிலவும் பகுதிகளிலிருந்து ஏனையோருக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கவேண்டும்.

தூரப்பிரதேசங்களுக்குச் செல்லாமல் தத்தமது வீடுகளில் இருந்தவாறே தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசியின் ஊடாக வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கோவில்கள், கலைக்கூடங்களில் கலை நிகழ்ச்சிகள், உற்சவங்கள் ஏற்பாடு செய்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவிப்பதைத் தவிர்ப்பதுடன் வழிபாட்டு நிகழ்வுகளின் பின்னர் சவர்க்காரமிட்டு கைகளை நன்கு கழுவவேண்டும். அந்தவகையில் அனைவருக்கும் பாதுகாப்பான விதத்தில் இம்முறை தீபாவளிப்பண்டிகையை புதிய விதத்தில் கொண்டாடுவோம் என்று சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55