(செ.தேன்மொழி)

மெனிங் சந்தையின் ஊழியர்களை உடனடியாக பீ.சி. ஆர்  பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சார் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்  ரோஹண  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்  மேலும் கூறியதாவது,

மெனிங் சந்தையின் நாட்டாமிகளுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதை அடுத்து அந்த  சந்தையின் நடவடிக்கைகள்  நிறுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ,மெனிங் சந்தையை பேலியகூட பகுதியில் திறப்பதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ,அந்த சந்தையில் தொழில் புரிந்தவர்கள்  பீ.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொண்டபின்னராகவே  சந்தையினுள்  அனுமதிக்கப்படுவர்.

ஆகவே ,இதுவரையில் பரிசோதனைகளை மேற்கொள்ளாதவர்கள்  071-8591555, 071-8591554மற்றும்  071-8591551 என்ற தொலைபேசி  இலக்கங்களின் ஊடாக தொடர்பு  கொண்டு  பீ.சீ.ஆர்  பரிசோதனையை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

இதேவேளை,  இவ்வாறு பீ.சீ.ஆர் பரிசோதனைகளை செய்துக்கொள்ள விரும்புபவர்கள் அவர்களுடைய பெயர் ,மெனிங்  சந்தையில் அவர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட கடைதொகுதியின் இலக்கம் , நிரந்தர வதிவிட  முகவரி ,தேசிய  அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை மேற்கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு குறுந்தகவல் சேவை ஊடாக அனுப்பிவைக்கவும் முடியும்.