கழிவுப் பொருட்களை அகற்ற புதிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியீடு

Published By: R. Kalaichelvan

12 Nov, 2020 | 01:49 PM
image

(க.பிரசன்னா)

கொரோனா நோய்த் தொற்று நிலைமையின் போது நபர்களினால் பயன்படுத்தப்படும் முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றுவது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகள் உள்ள பிரதேசங்களுக்கும் மற்றும் பொதுவாக அனைத்து பிரதேசங்களுக்கும் ஏற்ற வகையில் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் குறித்த வழிகாட்டல் ஆலோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் சிகிச்சை கழிவு பொருட்களை அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள், ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றுவதற்கு மஞ்சள் நிற பைகளை பயன்படுத்த வேண்டும்.

இந்த பொதிகளில் போடப்படும் கழிவு பொருட்கள் எந்த வகையிலும் மீள்சுழற்சி செய்யப்படாமல் முறையாக அழிக்கப்பட வேண்டும்.

நோய்த் தொற்றை தடுப்பதற்காக பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்களை அகற்றும் பொழுது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இந்த ஆலோசனை வழிகாட்டியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24
news-image

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு...

2023-11-29 16:45:36
news-image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து...

2023-11-29 17:31:21
news-image

பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் : இல்லாவிடில்...

2023-11-29 16:54:56