கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.

இதன் காரணமாக பயனர்கள் யூடியூப் காணொளிகளை பார்வையிட முடியாமல் சிறிது நேரம் போராடினர்.  

யூடியூப்பில் காணொளிகளை க்ளிக் செய்த போது, காணொளிகளை பார்க்க முடியாமல், போனதால் பயனர்கள் சீற்றத்துடன், சமூக வலைத்தளத்தில் பதிவுகளாகவும் பதிவிட்டனர்.


இந்நிலையில், தமது சேவையில் தடங்கல்  ஏற்பட்டமைக்கு வருந்துவதாகவும், சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டதாகவும்  யூடியூப் தளம் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.