இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றமும் 22 இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றமும் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.