மத்திய கிழக்கின் இரு நாடுகளிலிருந்து மொத்தம் 51 இலங்கையர்கள் இன்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி  31 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டார், தோஹாவிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் தொழில்வாய்ப்புக்காக ஓமானுக்கு சென்ற 20 இலங்கையர்கள் இன்று காலை 7.40 மணிக்கு மஸ்கட்டிலிருந்து ஓமான் ஏயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான WY-373 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.