நாடளாவிய ரீதியில் 16 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டு சிறந்த சில்லறை ஆடை விற்பனை நிலையமாக விளங்கும் ஃபஷன் பக் நிறுவனமானது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் உண்மையான அக்கறைக்கொண்டு, அதை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் தனது சமூக பொறுப்புணர்வு மிக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் “புருதுவென்ன” எனும் தலைப்பில் ஓர் விழிப்புணர்வு திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
“புருதுவென்ன” என்னும் இத்திட்டமானது சூழலை பாதுகாக்க முடியும் என்பதை பொதுமக்களுக்கு கற்பிப்பதுடன் அந்நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தும் பாரிய இரு செயற்பாடுகளை செய்து வருகின்றது. ஒரு தனி நபரின்விருப்பத்தின் பேரில் தாய் நாட்டின் இயற்கை சௌந்தரியத்தை பாதுகாக்க முடியும் என்னும் ஓர் வலிமையான செய்தியை இத்திட்டம் பறைசாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
“நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் எம் வாழ்க்கை பரபரப்பின் மத்தியில் நாம் செய்யும் சின்னஞ்சிறு செயல்கள் கூட இயற்கைக்கு தீங்கு விளைக்கின்றது என்பதை சிந்திக்க மறந்துவிடுகின்றோம்.
ஆகையினால் இத்திட்டமானது விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் சிறந்த களமாகும். மேலும் எமது ஒவ்வொரு செயற்பாடுகளினால் ஏற்படும் எதிர்வினையைப் பற்றி கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது. அத்துடன் இந்த பண்பைப் பேணிக்காத்தால், எதிர்கால சந்ததிகளுக்கு சிறந்த தூய்மையான சூழலை பாதுகாத்து வழங்க முடியும் என ஃபஷன் பக்கின் பணிப்பாளர் ஷபீர் சுபெயின் தெரிவித்தார்.
நாட்டின் பொறுப்புணர்வுமிக்க பிரஜை என்ற வகையில் சிறந்த சமுதாயமொன்றை கட்டியெழுப்பும் பணியானது நாடுமுழுவதிலும் செயற்படுத்தப்படும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வைத்தியசாலையிலுள்ள நோயாளர்கள் மற்றும் பர்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘எதிர்காலத் தலைமுறையினருக்காக ஒரு மரத்தை நடுவோம்’, ‘குப்பைகளை கூடையில் போடுங்கள்’ரூபவ் பொலித்தீன் பயன்பாட்டினை குறைத்திடுவோம்’ போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நல்ல வாசகங்களை தாங்கிய பெயர் பலகைகள் ஃபஷன் பக்கின் மூலம் காட்சிப்படுத்தபடவுள்ளன.
ஆண்டுதோறும் 20 மில்லியன் ரூபாவுக்கும் மேலான தொகையை நாடுமுழுவதிலும் செயற்படுத்தப்படும் கல்வி, விளையாட்டு மற்றும் சமூக பொறுப்புணர்வுமிக்க பொது நடவடிக்கைகளுக்காக ஃபஷன் பக் செலவுசெய்து வருகின்றது.
அண்மையில் தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசமின் கோரிக்கைக்கு அமைய நாடுமுழுவதிலுமுள்ள தொழில் வழிகாட்டல் திட்டங்கள், அஞ்சல் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்ற பல்வேறு பொது இடங்களை புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் மாணவர்களுக்கு புலமைபரிசில்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதாக டாக்டர். எஸ். எச். எம். பராஸ் தெரிவித்தார்.
1994 இல் தனது வர்த்தக செயற்பாடுகளை பங்காண்மை வர்;த்தகமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த ஃபஷன் பக், தற்போது 16 காட்சியறைகளை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 15 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட ஃபஷன் பக், தற்போது 1250 ஊழியர்களை கொண்டுள்ளது.
இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையகங்களில் ஒன்றாக திகழ்வதுடன் மாற்றமடைந்துவரும் வாழ்க்கைமுறைக்கு அமைவாக நவநாகரீக ஆடைகளை வழங்கிவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM