(நா.தனுஜா)
திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உணவுப்பொதிகளை வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் 43,376 குடும்பங்களுக்கு அவ்வுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமது வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்கும் செயற்திட்டத்தின் ஊடாக 1409578 குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன.
இக்காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளினால் நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக 7.56 பில்லியன் ரூபா நீதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனூடாக கொழும்பு மாவட்டத்தில் 7500 குடும்பங்களும் கம்பஹா மாவட்டத்தில் 7000 குடும்பங்களும் களுத்துறை மாவட்டத்தில் 4000 குடும்பங்களும் நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அதேபோன்று வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதற்காக 7.04 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதுடன், அதனூடாக கம்பஹா மாவட்டத்தில் 544,254 குடும்பங்களும் கொழும்பு மாவட்டத்தில் 466,720 குடும்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் 262,000 குடும்பங்களும் பயன்பெற்றிருக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM