பயணிகள் பாரமுயர்த்திகள், எஸ்கலேட்டர்கள் மற்றும் பயணிகள் பட்டிகள் விநியோகஸ்த்தரான சீனாவின் ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர்ஸ் கம்பனி லிமிட்டெட் உடன் மெட்ரொபொலிடன் கைகோர்த்து பரிபூரண தொழில்நிலைய மற்றும் கட்டிட தீர்வுகளை ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கும் விஸ்தரிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு எஸ்கலேட்டர்கள் மற்றும் பயணிகள் பாரமுயர்த்திகளை உற்பத்தி செய்து நிறுவும் செயற்பாடுகளை ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர் கம்பனி லிமிட்டெட் முன்னெடுத்து வருகிறது. 

இந்நிறுவனம் தற்போது, சீனப் பிராந்த்தியத்தில் பக்கவாட்டான மற்றும் நிலைக்குத்தான பயண தீர்வுகளை விநியோகிப்பதில் முன்னோடியாக திகழ்வதுடன், உலகளாவிய ரீதியிலும் முன்னணியில் திகழ்கிறது.

ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர்ஸ் கம்பனி லிமிட்டெட் சர்வதேச வியாபார திணைக்களத்தின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர்  சூ ஃபெய் கருத்து தெரிவிக்கையில்,

 “5 வருடங்களுக்கு மேலான தொழிற்துறை அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் கிளை மற்றும் உதவிச்சேவை வலையமைப்பைக் கொண்டுள்ள நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 

மெட்ரொபொலிடனின் தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் 24 மணி நேர நாடு முழுவதும் பரந்த உதவிச் சேவை என்பவற்றுடன் ஷங்ஹாய் மிட்சுபிஷியின் தொழில்நுட்பம் இணைந்து வெற்றிக்கான சிறந்த பங்காண்மையாக அமைந்துள்ளன” என்றார்.  

மெட்ரொபொலிடன் என்ஜினியரிங் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர்  ஐவோர் மஹரூஃவ் கருத்து தெரிவிக்கையில், 

“மெட்ரொபொலிடன் தெரிவுகளில் பக்கவாட்டான மற்றும் நிலைக்குத்தான பயணத் தீர்வுகளில் இந்த புதிய உள்ளடக்கத்துடன், நிர்மாணத்துறையில் சகல விதமான கட்டிட நிர்மாண மற்றும் செயற்திட்ட தீர்வுகளை ஒற்றை விநியோகஸ்த்தரிடமிருந்து பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்” என்றார்.

தற்போது மெட்ரொபொலிடன் மாபெரும் கட்டிட நிர்வாக விசேடத்துவ தெரிவுகளையும் பணிபுரியும் தீர்வுகள் தயாரிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் வாயுகுளிரூட்டிகள் மற்றும் குளிராக்கும் சாதனங்கள், standby power, networking and computing, printing, imaging, telephoning மற்றும்  communication infrastructure to furniture, building automation hardware மற்றும் software, to smart cards, CCTV products போன்றன உள்ளடங்கியுள்ளன. 

“எமது தயாரிப்புகள் தெரிவுகளை விஸ்தரிக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். குறிப்பாக நிலைக்குத்தான மற்றும் பக்கவாட்டான பயணத் தீர்வுகளை வழங்குவதில் பூஜ்ஜிய வழுக் கொள்கையை இந்நிறுவனம் பேணி வருகிறது” என மஹரூஃவ் தெரிவித்தார்.

ஷங்ஹாய் மிட்சுபிஷி என்பது ஷங்ஹாய் இலெக்ரிக் சீனா மற்றும் மிட்சுபிஷி இலெக்ரிக் கோர்பரேஷன் ஜப்பான் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்த ஸ்தாபனமாகும். 

1987 ஆம் ஆண்டு நான்கு பங்காளர்கள் மூலமாக முதலிடப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமாகும்.  ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர் கம்பனி லிமிட்டெட் என்பது, சந்தையில் தனது தலைமைத்துவ நிலையை கடந்த 28 ஆண்டுகளில், 16 ஆண்டுகளாக பேணி வருவதுடன், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்துள்ளது.