கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிப்பவர்களை  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், நாட்டில் தனிமைப்படுத்தபபட்டுள்ள பகுதிகளினுள் நுழையவோ அல்லது அங்கிருந்து வெளியேறவோ  யாருக்கும் இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதற்கமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் இருந்து எவரும் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார்.