இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரவு, பகல் பட்டம் விடும் நிகழ்ச்சி இளம் தலைமுறையினருக்காக வெகுவிமரிசையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

இந் நிகழ்ச்சி எதிர்வரும்  ஆவணி மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மலை 7 மணி வரை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு விமானத்துறை பற்றிக் கனவுகாணும் சிறார்களுக்குச் சிறந்ததொரு களத்தினை உருவாக்கும் என நம்பப்படுகின்றது.

போட்டிநிகழ்வுகள் பின்வருமாறு,

1. சிறந்த வடிவமுடைய பட்டங்கள் - மரபுசாராத வடிங்கள்

2. சிறந்த இயற்கையான பட்டங்கள் - இலங்கை இயற்கையைப் பாதுகாத்தல்

3. சிறந்த பாரம்பரிய பட்டங்கள் - இலங்கையின் பாரம்பரிய வடிவங்கள்

4. சிறந்த புதிய வடிவமைப்புக்கள் - காற்று மூலம் இயங்கக்கூடிய மாதிரி விமான வடிவங்கள்

நிகழ்வு 01 - சிறந்த பட்டவடிவமைப்பு மரபு சாராத வடிவங்கள் (இரவு, பகல், நிகழ்வு)

நிகழ்வு 02 - சிறந்த இயற்கையான பட்டங்கள் (இரவு, பகல், நிகழ்வு)

நிகழ்வு 03 - பண்பாட்டுக்கான சிறந்த பட்டம் இலங்கையின் பாரம்பரிய முகமூடி மாதிரிகள் (இரவு பகல் நிகழ்வு)

நிகழ்வு 04 - சிறந்த புதுமைக்கான பட்டம் காற்று மூலம் இயங்கக் கூடிய மாதிரியான பட்டங்கள் (இரவு பகல் நிகழ்வு)

இதற்கு புதிய எண்ணக்கருவான பார்வையும் மின்சக்தியை உருவாக்கக்கூடிய விசையாழிகளைக் கொண்டு உருவாக்கப்படல் வேண்டும். ஒளியூட்டுவதற்காக LED மின்குமிழ்களை பயன்படுத்தமுடியும்.

சகல பங்குபற்றுனருக்கும் பெறுமதிவாய்ந்த சான்றிதழ்கள் ராவணா ஏவியேஷனால் வழங்கப்படும். 1 ஆம்,  2ஆம், 3 ஆம் இடங்களைப் பெறுபவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படும்.

அதிசிறந்த பட்டம் விடுபவருக்கு “ராவணா பட்டவிருது - 2016” வழங்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் பறக்கும் வர்ணவிளக்குகள் ஆகாயத்தில் ஏவப்படும். 

மேலதிக தரவுகளுக்கு ராவணா ஏவியேஷன் அக்கடமி 0712725133 / 07773734315 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.