சமூக இடைவெளி பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் நேற்று மாத்திரம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் 137 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந் நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களிற்கு எதிராக 10,000 ரூபாவிற்கு மேற்படாத அபராதம் விதிக்கப்படலாம். அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.