(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்துடன் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நின்றார்கள்.

அதனூடாக வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, மக்களின் ஒற்றுமையைப் பலிகொடுத்தேனும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் தேவையாக இருந்தது. 20 வது திருத்தம் ஒரு தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது என்பதையே மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு  எதிரான போராட்டத்தில் அரசாங்கத்துடன் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நின்றார்கள்.

அதனூடாக வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, மக்களின் ஒற்றுமையைப் பலிகொடுத்தேனும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் தேவையாக இருந்தது.

ஆனால் தற்போதுவரை குறைந்தபட்சம் பொருட்களின் விலைகளிலேனும் மட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அரசாங்கம் தவறியிருக்கிறது.

நாங்கள் மீண்டும் கூறுகின்றோம். அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் என்பது உண்மையில் ஒரு தற்கொலை முயற்சி.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கிய மைல்கல்லாகும்.

அந்தத் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருப்பதை உலகத்தலைவர்கள், சர்வதேசக் கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

இதுவே மனிதாபிமானத்திற்கு ஏற்படக்கூடிய மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.