பஹ்ரைன் பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலீபா அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் இன்று புதன்கிழமை காலமானார் என அந்நாட்டு அரச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் பிரதமரின் இறுதிச் சடங்கில் மட்டுப்படுத்தப்பட்ட உறவினர்களின் பங்குபற்றுதலுடன் அடக்கம் செய்வதற்காக வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என நீதிமன்ற அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மறைவையடுத்து நாட்டில் ஒருவார துக்கதினத்தை அனுஷ்டிக்குமாறு பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் அறிவிப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் தேசியக் கொடியைக் அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், வியாழக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு அரசு நிறுவனங்களில் பணிகளை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.