தென்கொரியா நன்கொடையாக வழங்கிய 30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளது.

30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகளும் 11 பெரிய பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் - 471 என்ற விமானத்தின் மூலம் தென்கொரியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.