இலங்கையில் மிகப் பெரிய கப்பலொன்றை தயாரித்து கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.  

ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

குறித்த கப்பலை தயாரிப்பதற்கு, ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்துடன் இணைந்து கொழும்பு டொக்யார்ட் நிறுவனமும் இணைந்து செயற்பட்டுள்ளதுடன், 51 சதவீத பங்களிப்பு ஜப்பானுக்கும் 35 சதவீதப் பங்களிப்பு இலங்கையின் அரச நிறுவனமொன்றுக்கும் உரித்தாகுமென தெரியவந்துள்ளது. 113.1 மீற்றர் நீளமான இந்தக் கப்பலின் அகலம் 21.5 மீற்றர்களும், ஆழம் 8.8 மீற்றர்களும் ஆகுமெனவும், மணிக்கு 14.5 மைல் வேகத்தில் இந்தக் கப்பலால் பயணிக்க முடியுமெனவும் தெரியவந்துள்ளது. 

முழுமையாக உள்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் இந்தக் கப்பல் 21 மாதங்களில் தயாரிக்கப்ட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.