ரோஹிங்கியார்களை வாக்களிப்பில் உள்ளீர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மியன்மாருக்கு அறிவுறுத்தல்

Published By: Vishnu

11 Nov, 2020 | 01:09 PM
image

ரோஹிங்கிய முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்களிப்பு நடவடிக்கையில் உள்ளீர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் திங்களன்று மியன்மாறுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி ரோஹிங்கிய சமூகம் உட்பட நாட்டின் அனைத்து இன, மத மற்றும் சிறுபான்மை குழுக்களை முழுமையாக தேர்தல் கடமைகளில் உள்ளீர்த்து, அனைவரின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் நபிலா மஸ்ராலி ஒரு அறிக்கையில் மியன்மாரிடம் வலியுறுத்தியுள்ளார்.

27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழு மியான்மரை சர்வதேச தரங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க தேர்தல் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளது.

சுமார் 54 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தநது.

இது 50 ஆண்டுகால இராணுவ ஆட்சி 2011 ஆம் ஆண்டில் முடிவடைந்த பின்னர் இடம்பெறும் இரண்டாவது பொதுத் தேர்தலாகும்.

90 க்கும் மேற்பட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 5,643 வேட்பாளர்கள் 1,171 தேசிய, மாநில மற்றும் பிராந்திய இடங்களுக்கு போட்டியிட்டனர்.

இதில் மியான்மரின் அரச ஆலோசகர் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் தேர்தலில் மில்லியன் கணக்கான வாக்காளர்களை வாக்களிக்காததால் தேர்தல்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

2015 தேர்தலுக்கு முன்னதாக ரோஹிங்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டமையினால் ராகைன், ஷான் மற்றும் கச்சின் உள்ளிட்ட மாநிலங்களின் பெரிய பகுதிகளிலும் வாக்களிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 740,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் மியான்மரை விட்டு, அண்டை நாடான பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32