கொரோனா அச்சத்துக்கும் மத்தியிலும் 13 ஆவது ஐ.பி.எல். தொடரானது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

மொத்தமாக 8 அணிகள் பங்கு பற்றிய இத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்ல்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

நேற்றிரவு துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் டெல்லி அணியை ஐந்து விக்கெட்டுகளினால் வீழ்த்தி மும்பை அணி 5 ஆவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந் நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு சீசனில் விருது பெற்ற வீரர்கள் விவரம்: 

 • வளர்ந்து வரும் வீரர்: தேவ்தத் படிக்கல் (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு)
 • அதிக ஓட்டங்களை குவித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி: கே.எல் ராகுல் (14 போட்டிகளில் 670 ஓட்டங்கள்)
 • அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்காக வழங்கப்படும் ஊதா நிற தொப்பி: காகிசோ ரபாடா (30 விக்கெட்டுகள்)
 • கேம் சேஞ்சர் விருது: கே.எல் ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) 
 • சூப்பர் ஸ்டிரைக்கர் விருது: கீரோன் பொல்லார்ட் (மும்பை)
 • அதிக சிக்ஸர்களை விளாசியவருக்கான விருது: (இஷான் கிஷன் - (மும்பை - 30 சிக்ஸர்கள்)
 • பவர் பிளேயர் விருது: டிரண்ட் போல்ட் (மும்பை)
 • ஃபேர் பிளே விருது: மும்பை இந்தியன்ஸ்
 • மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது: ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)
 • இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கான விருது: டெல்லி கெப்பிட்டல்ஸ்
 • வெற்றியாளருக்கான விருது: மும்பை இந்தியன்ஸ்