நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றானது வயது, பாலின்றி சகலருக்கும் ஏற்பட்டுவரும் தொற்று நோயாக மாறி வருகிறது. 

இந்நிலையில், தாய்பாலூட்டும் தாயொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நிலையில், குறித்த தாய், எவ்வித அச்சமும் இன்றி குழந்தைக்கு தொடர்ந்தும் பாலூட்டலாம் என சுகாதார அமைச்சின் போசாக்கு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை வைத்தியர் லக்மினி மெகொடரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.