திருகோணமலை வைத்தியசாலையில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு கொரேனா தொற்றுக்குள்ளானவர் முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியருடன் தொடர்புகளை பேணியவர் என தெரியவந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 14 ஆக காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.