குருநாகல், வாரியப்பொல பிரதேசத்தில் ஹெரொயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவரை வாரியப்பொலை பொலிஸார் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.

வாரியப்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே போதைப்பொருளுடன் பெண்ணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண்னிடமிருந்து 25 கிராமிற்கும் மேற்பட்ட ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப் போதைப்பொருளுடன் கைதாகியுள்ள பெண் வாரியப்பொல வேரபொல பிரதேசத்தைச் சேர்நத 43 வயதுடையவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண்ணை வாரியப்பொல நீதிவான் முன்  இன்று ஆஜர் செய்யவுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.