ஜோ பைடனின் வைத்திய குழுவிற்கு தமிழக பெண் வைத்தியர் தெரிவு!

Published By: Jayanthy

11 Nov, 2020 | 12:24 AM
image

அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ள குழுவிற்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் வைத்தியர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரின் தேர்தல் வாக்குறுதிப்படி அமெரிக்காவில் கொரோனாவைரஸை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

 செலின் கவுண்டர்

இதற்கமைய,  13 பேர் அடங்கிய குழு ஒன்றை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

இந்த குழுவில் இந்திய வம்சாவெளியை சேர்ந்த வைதியர்கள் மூவர் இடம்பிடித்து உள்ளனர். அதில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட செலின் கவுன்டர் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர் செலின் கவுண்டர் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலையம் கிராமத்தை சேர்ந்த ராஜ் நடராஜன் கவுண்டர் என்பவரின் மகளாவார். இவர் நோய் தொற்று அறிவியில் பாட பிரிவில் பட்டம் பெற்று இருக்கிறார். மேலும் இவர் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் பயின்று நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசரியராக பணியாற்றி வருகிறார். 

அத்துடன் இக் குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வைத்தியர் விவேக் மூர்த்தி மற்றும் வைத்தியர் அதுல் கவாண்டே ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08