இன்று 430 பேருக்கு கொரோனா தொற்று : கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

Published By: Jayanthy

10 Nov, 2020 | 10:00 PM
image
  •  இன்று 430 தொற்றாளர்கள்
  •  பல்பொருள் அங்காடி ஊழியர்களுக்கு தொற்றுறுதி
  • திங்களன்று 12 மாவட்டங்களில் தொற்றாளர்கள்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மரணங்கள் 41 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமையும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின. இவ் மரணங்களில் ஒரு பெண்ணும் 4 ஆண்களும் உள்ளடங்குவதோடு , உயிரிழந்த ஆண்களில் ஒருவர் அடையாளம் காணப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வரை 430 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 14,715 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 9537 பேர் குணமடைந்துள்ளதோடு 5,137  பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பதிவான மரணங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

  • இராஜகிரிய பிரதேசத்தில் முதியோர் இல்லத்தில் வாழ்ந்த 51 வயதுடைய நபரொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் தொற்றுடன் நியுமோனியா ஏற்பட்டமையாகும்.
  • கொழும்பு -10 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையிலேயே உயிரிழந்த குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று ஏற்பட்டதால் சுவாச தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பாகும்.
  • கம்பஹா வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட , கம்பஹா உடுகம்பல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்னொருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். கொவிட்டுடன் நியூமோனியா ஏற்பட்டமையும் மரணத்திற்கான காரணமாகும்.
  • 55 – 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் காணப்படாத நபரொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கடந்த 8 ஆம் திகதி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் போதே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ள நிலையில் , ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்ததோடு கொவிட் தொற்றுக்கும் உள்ளாகியுள்ளமை மரணத்திற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் பல்பொருள் அங்காடி கிளை ஊழியர்களுக்கு தொற்றுறுதி

திம்பிரிகஸ்ஸாய மற்றும் ஹேவ்லொக் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஒரே நிறுவனத்திற்குரிய இரு பல்பொருள் அங்காடி கிளைகளிலுள்ள ஊழியர்கள் மூவருக்கு இன்று கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி எழுமாறாக மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவு இன்று கிடைத்துள்ள நிலையில் குறித்த 3 ஊழியர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கிருமி நீக்கல் நடவடிக்கைகளுக்காக குறித்த இரு கிளைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கமையவே குறித்த இரு பல்பொருள் அங்காடிகளும் மீள திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று 12 மாவட்டங்களில் தொற்றாளர்கள்

நேற்று திங்கட்கிழமை 12 மாவட்டங்களில் 356 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். கம்பஹாவில் 99, கொழும்பில் 193, களுத்துறையில் 28, குருணாகலில் 4, இரத்தினபுரியில் 8, கண்டியில் 7, அநுராதபுரத்தில் 1, மட்டக்களப்பில் 6, காலியில் 2, மாத்தறையில் 3, புத்தளத்தில் 1, திருகோணமலையில் 1, போகம்பரை சிறைச்சாலையில் 2, ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04