மூத்த சமாதான பேச்சுவார்த்தையாளரும், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பாலஸ்தீனியர்களின் முக்கிய சர்வதேச பேச்சாளருமாகவிருந்த சாப் எரேகாட் உயிரழந்துள்ளார்.

65 வயதான சாப் எரேகாட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, பல வாரங்களாக சிகிச்சை பெறறு வந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

சாப் எரேகாடின் மரணத்தை அவரது ஃபத்தா கட்சி ஒரு அறிக்கையில் அறிவித்தது. 

உறவினர் மற்றும் ஒரு பாலஸ்தீனிய அதிகாரி அவர் காலமானதை உறுதிப்படுத்தினார்.

எரேகாட்டுக்கு அவரது மனைவி, இரண்டு மகன்கள், இரு மகள்கள் மற்றும் எட்டு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

சாப் எரேகாட் 1991 முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான கிட்டத்தட்ட ஒவ்வொரு சுற்று சமாதான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தார்.