( மயூரன் )

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி, மரணத்தை ஏற்படுத்தி  விட்டு தப்பிச்சென்ற காரினை நேற்று  திங்கட்கிழமை  கோப்பாய் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். 

கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியில் சென்ற வயோதிபர் ஒருவரை காரினால் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு  காரில் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

விபத்துக்குள்ளான வயோதிபரை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காமல் குறித்த வயோதிபர் உயிரிழந்தார். 

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிசார் விபத்துக்கு காரணமாக காரினை கைப்பற்றியுள்ளதுடன் , காரின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.