நடிகர் விக்ரமின் மகளுக்குப் பெண் குழந்தையொன்று  பிறந்துள்ளது. இதனையடத்து நடிகர் விக்ரம் தாத்தா ஆகியுள்ளார்.

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து மகள் வழி பேரனான மனுரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா வுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் நடிகர் விக்ரம் தாத்தாவாகி உள்ளார். 

இயக்குநர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் விக்ரமுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள். நீங்கள் நிச்சயமாக ஜாலியான தாத்தாவாக இருப்பீர்கள். குடும்பத்துக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகர் விக்ரம் இந்த இரண்டு படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் உடன் இணைந்து நடிக்க உள்ளார்.