(க.பிரசன்னா)
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 228 தொழிலாளர்கள் இன்று இரவு நாட்டுக்குத் அழைத்து வரப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சின் கொவிட் 19 செயற்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அபுதாபியில் பாதுகாப்பான வீடுகளிலிருந்து வெளியேறியவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட 45 பேரும் இவற்றில் உள்ளடங்குகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தின் போது மத்திய கிழக்கில் சிக்கித் தவிக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பான விவகாரம் தொடர்பில் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கோலாம்பகே கேள்வியெழுப்பியிருந்த நிலையிலேயே குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தொழிலை இழந்துள்ளதாகவும் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பூங்காக்களிலோ அல்லது வீதிகளிலோ தூங்குவதாகவும் வெளியுறவு செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவற்றை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான ஒப்புதலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது சாதாரண பயணிகள் விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா நோய்த்தாக்கம் நாட்டில் அதிகரித்துச் செல்கின்ற நிலையிலும் ஜனாதிபதியினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கித் தவிக்கும் சுமார் 150 இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பி அழைக்கும் செயற்பாடுகள் இவ்வாரத்துக்குள் முன்னெடுக்கப்படுமென அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM