யுவதியொருவர் மீது காதல் கொண்டிருந்த இரு இளைஞர்களிடையே ஏற்பட்டமோதலில் ஒரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், மற்றவர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பதுளையின் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் இரு இளைஞர்களும் யுவதி ஒருவரை காதலித்து வந்தனர். குறித்த யுவதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இரு இளைஞர்கள் முயற்சிக்கும் போது, அவர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் மோதல் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.