உலகெங்கும் பரவிவரும், கொரோனா தொற்றால், நாடுகளின் தலைவர்கள் பலரும் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மீண்டு வருகின்றனர். 

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி வெலட்மிர் செலன்ஸ்கிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

.

அத்தகவலை, ஜனாதிபதி வெலட்மிர் செலன்ஸ்கிக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.  

அதில், அவர் கூறியிருப்பதாவது, 

தாம் தற்பொழுது ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அதிகபடியான விட்டமின்களை தான் உட்கொள்வதால், விரைவில் மீண்டு வருவேன் எனவும், உக்ரைன் ஜனாதிபதி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உக்ரைன் நாட்டு ஜனாதிபதியின் மனைவிக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்து, தற்பொழுது குணமடைந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.