Published by R. Kalaichelvan on 2020-11-10 15:38:21
தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 38 பேர் இன்று தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 64,075 பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டுவரும் 27 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2,362 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேவேளை கட்டாரில் இருந்தும் , ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் 34 இலங்யைர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
எனினும் நாட்டிற்கு திரும்பியவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் மொத்தம் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.