இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151- ஆவது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், நேபாள மொழியில் தொகுக்கப்பட்ட மகாத்மா காந்தி குறித்த நூல் தொகுப்பை நேபாள ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வெளியிட்டார்.

'காந்தியடிகளை நான் புரிந்துகொண்டது’ என்ற தலைப்பிலான இந்த நூல், நேபாள ஜனாதிபதி  மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் அவருடைய சிந்தனைகளை நேபாள இளைஞர்கள் அறிந்து கொள்ளச் செய்வதே இந்த நூல் வெளியீட்டின் முக்கிய நோக்கமாகும்.