முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு அருகாமையில் உள்ள வி.சிவசுப்பிரமணியம் என்பவரது வயல் காணி துப்புரவு செய்யப்பட்டு அந்தக் காணியில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த காணியில் நெல் விதைக்கப்பட்ட நிலையில் மண்வெட்டி கொண்டு குறித்த வயல் நிலங்களுக்கான வரம்புகளை அமைக்க முற்பட்டபோது அங்கு, வெடிபொருள் இருந்ததை அவதானித்தவர்கள், மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு கடந்த மூன்றாம் திகதி வெடிபெருட்களை பார்வையிட்டுள்ளனர்.இதன்போது இவ்வாறு மனித எச்சங்கள் இருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்  மூன்றாம் திகதி முதல் இன்றுவரை குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இடத்தை பார்வையிடுவதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று (10)வருகை தரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.