கரடியனாறு பகுதியில் வெளிச்சமில்லாமல் சென்ற உழவு இயந்திரத்தில் மோதுண்ட இளைஞர் சிகிச்சை பயனின்றி பலியாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய உழவு இயந்திர சாரதி நேற்று திங்களன்று 09.11.2020 கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் செங்கலடி ஐயன்கேணிக் கிராமத்தைச் சேர்ந்த கே. ஜெனுதாஸ் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு பலியானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளியன்று 06.11.2020 இவர் மட்டக்களப்பு பதுளை வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது எதிரே முகப்பு வெளிச்சமின்றி வந்து கொண்டிருந்த உழவு இயந்திரம் மோதியதில் இவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து குறித்த இளைஞர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று திங்களன்று 09.11.2020 மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தார்.
இச் சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் கரடியனாறு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM