மாதம் முழுவதும் வரவு - செலவுத் திட்ட விவாதம் வேண்டுமென அடம்பிடிக்கும் எதிர்க்கட்சி

Published By: J.G.Stephan

10 Nov, 2020 | 01:13 PM
image

(ஆர்.யசி)

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தை பத்து நாட்களில் முடிக்க வேண்டும் என ஆளும் தரப்பினர் கட்சி தலைவர் கூட்டத்தில் கோரிக்கை  விடுத்தும்  எதிர்கட்சியினர் அதனை எதிர்த்துள்ளனர். முழு மாதமும் விவாதத்தை நடத்தியாக வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ள நிலையில் இறுதித் தீர்மானம் அடுத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.

அடுத்தகட்ட பாராளுமன்ற செயற்பாடுகள்  குறித்து  ஆராய  பாராளுமன்ற கட்சி தலைவர் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடவுள்ளது.

இதன்போது எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள 2020 ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதில் இறுதி காலாண்டுக்காக இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை சமர்பிக்கவும் காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை விவாதம் நடத்தவும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 வாக்கெடுப்பு இல்லாது நிறைவேற்றுவது என்றால் சிறைச்சாலையில் உள்ள பிரேமலால் ஜெயசேகர எம்.பி மற்றும் ரிஷாத் பதியுதீன் எம்.பி ஆகியோர் பாராளுமன்றத்திற்கு வருகைதர அவசியம் இல்லை எனவும், ஒருவேளை வாக்கெடுப்பு நடத்தக் கேட்டால் குறித்த நேரத்திற்கு மாத்திரம் இருவரையும் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரவும் கட்சி தலைவர்கள் கூட்டத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிற்பகல் 5 மணி தொடக்கம் 8 மணி வரையில் நிகழ்கால நாட்டு நடப்புகள் மற்றும் கொவிட் தடுப்பு செயற்பாடுகள் குறித்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக ஆளும் தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  எதிர்வரும்  17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பிக்க  அரசாங்கம் தயாராகியுள்ள நிலையில் இந்த விவாதத்தை 10 நாட்களுக்கு மாத்திரம் நடத்துவதாக  ஆளும் தரப்பினர் கட்சி தலைவர் கூட்டத்தில் கூறியுள்ளனர்.

எனினும் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரதான  எதிர்க்கட்சி, வரவு செலவு திட்ட விவாதத்தை 25 நாட்களும் நடத்தியாக வேண்டும் என விவாதித்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த போதிலும் விவாதத்தை மட்டுப்படுத்துவதா அல்லது முழுமையாக 25 நாட்களும் விவாதத்தை நடத்துவதா என்பது குறித்து இறுதியான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. இது குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் 12 ஆம் திகதி கூடும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுப்பதாக  தீர்மானித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00