முழு உலகை ஆட்டங்காண வைத்துள்ள கொரோனா வைரஸிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றிக் கொள்ள அனைத்து உலக நாடுகளும் போராடி வருகின்றன. 

அடுத்த வருடம்  2021 மார்ச் மாதம் பயன்படுத்தக்கூடிய கொவிட் 19 இற்கான தடுப்பூசி தற்போதைய கொரோனா பரவல் நிலைமையை முழுமையாக மாற்றக்கூடும் என நம்பிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.இந்தத் தகவலை, உலக சுகாதார அமைப்பின் சிரேஸ்ட அதிகாரி புரூஸ் அய்ல்வேர்ட் வெளியிட்டுள்ளார். 

பைசர், பயோடெக் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொவிட் 19 தடுப்பூசி பெரும்பாலும் வெற்றி மட்டத்தில் இருப்பதாகவும் , குறித்த கொரோனா தடுப்பூசி  90 சதவீதம் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என முதல் ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை மேலும் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.