நாட்டை முடக்கி பொருளாதாரத்தை முடக்குவதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்கிறார் நாமல்

Published By: T Yuwaraj

10 Nov, 2020 | 11:11 AM
image

நாட்டை முடக்கி பொருளாதாரத்தை முடக்குவது தான் எதிர்கட்சியினரின் நோக்கம் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

தென்பகுதியில் இருந்து வட பகுதிக்கு வருகின்ற அமைச்சர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிற அதே வேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் செய்ய வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் கொவிட்-19 இருந்தது. அவர்கள் எங்களை விட மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஆனாலும் இப்போது அவர்கள் வாழ்க்கை முன்னேறிக்கொண்டு தான் செல்கிறது. நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

பொதுமக்களோ, சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்க முடியாது. அதனை சுகாராத அமைச்சு தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் வழங்கும் விடயங்களை வைத்துக்கொண்டு தான் அரசாங்கம் முடிவெடுக்கும். 

ஆனால் எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள். பொருளாதாரத்தை முடக்குவது தான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது. நாடு முடக்கப்பட்டாலும் அவர்கள் வெளியில் நடமாடுவார்கள்.

அவர்கள் கருமங்களை அவர்கள் செய்வார்கள். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதை விரும்பவில்லை. பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12
news-image

யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச்...

2023-05-28 18:10:40
news-image

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய...

2023-05-28 17:55:09