யாழ்ப்பாணம் வடமராட்சி மா முனைப்பகுதியில் 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு 8.00 மணி அளவில்  கரை ஒதுங்கி உள்ளனர்.

இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகில் தொழிலுக்குச் சென்ற நிலையில் ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும்  எரிபொருள் தீர்ந்த நிலையிலும் தாம் கரையொதுங்கிய தாக இந்திய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இந்த நான்கு மீனவர்களும் மாமுனை பகுதியில் கரை ஒதுங்கிய பின்னர் தாமாகவே சென்று இலங்கை  கடற்படையினரிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற இலங்கை கடற்படையினர் இவர்களை பொலிசாரிடம் கையளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.