இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் இன்றையதினம் கந்தானை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.