(எம்.மனோசித்ரா)
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் மாவட்டம் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் குறித்து விளக்கமளிக்கையில் அதன் தலைவர் உபுல் றோஹன இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை திறப்பதற்கு பொறுத்தமான எவ்வித சூழலும் இன்னும் உருவாகவில்லை. அதே போன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அல்லது அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் இயன்றளவு ஊழியர்களின் எண்ணக்கையை மட்டுப்படுத்துமாறே கோருகின்றோம்.
கொவிட் கட்டுப்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும். இதே வேளை மாகாணங்களுக்கிடையிலான மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தொடர்பிலும் வரையறைகள் விதிக்கப்பட வேண்டும்.
தற்போது கொத்தணிகளாக தொற்றாளர்கள் இனங்காணப்படும் எண்ணிக்கை குறைவடைந்தாலும் , நாடளாவிய ரீதியில் உருவாகிய கிளைக்கொத்தணிகளில் தினமும் குறிப்பிட்டளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனவே சகல மாவட்டங்களிலுமுள்ள பொது மக்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM