பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் எதிர்  அணி போட்டியாளரால் தக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 30 திகதி கண்டி – பல்லேகல உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற குத்துச் சண்டை போட்டியின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் இரத்தினபுரி சீவிலி மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 17 வயதுடைய மாணவியே உயிரிழந்தவராவார்.