நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசி வேண்டி வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் நேற்று  (2020.11.08) பிற்பகல் கலந்து கொண்டார்.வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடந்த இந்த ஆசீர்வாத பூஜையில் பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.இதன்போது கொவிட்-19 தொற்று நிலைமையிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு பிரதமரின் குடும்பத்தினர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திக்கப்பட்டது.