முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட பிணை மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும்  செப்டம்பர்  08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மணிலால் வைத்தியதிலக இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விசாரணையின் போது சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட மூவருக்கு மேல் நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.