நெருக்கடியான  நிலைமை ...!

Published By: Gayathri

09 Nov, 2020 | 11:15 AM
image

அரசாங்கம் இன்று தொடக்கம் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியுள்ளது. இருந்தபோதிலும் 5 மாவட்டங்களில் 26 பொலிஸ் பிரிவுகளில் மற்றும் ஒரு கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் 12 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹாவில் 8 பொலிஸ் பிரிவுகளும், களுத்துறையில் இரு பொலிஸ் பிரிவுகளும் ஒரு கிராம சேவகர் பிரிவும், குருணாகலில் இரு பொலிஸ் பிரிவுகளும், கேகாலையில் இரு பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படும்.

கொழும்பில் பொலிஸ் பிரிவுகளான மட்டக்குளி, முகத்துவாரம், புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், வெரலபட, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுணுகம, ஜாஎல, சபுகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

களுத்துறை மாவட்டத்தில் ஹொரன மற்றும் இங்கிரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளும், வேகட பட்டஹிர கிராம சேவகர் பிரிவு என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும்.

குருணாகல் மாவட்டத்தில் குருணாகல் நகர எல்லை மற்றும் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு என்பவை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.

இதேவேளை, கொவிட்-19 தொற்று பரவல் தொடர்பில் கடும் அனர்த்தத்துடனான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 வீடமைப்பு திட்டங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த வீடமைப்பு திட்டங்களில் வாழும் மக்கள் வீடுகளுக்கிடையில் நடமாடுவதை தவிர்த்து பயணங்களை வரையறுத்து தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மெத்சந்த செவன, மிஹிஜய செவன, மோதர ரன்மின செவன, சிரிசந்த உயன தெமட்டகொட மற்றும் மாளிகாவத்தை என்.எச்.எஸ். வீடமைப்பு திட்டம் என்பனவே அவையாகும்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அரசு அறிவித்துள்ளது.  அதாவது;

●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ எந்த நபர்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

●வேலைகள் / வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியேற எந்த நபர்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ஊரடங்கு உத்தரவு இல்லாத பகுதிகளுக்கு வேலைவாய்ப்பும் தடைசெய்யப்பட்டுள்ளது.

●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை 

●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வேறொரு பகுதிக்கு வெளியேற எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. 

●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்க வேண்டும்.

எனவே மக்கள், நிலைமையை உணர்ந்து அமைதியாக தத்தமது வீடுகளில் இருப்பதை தவிர, வேறு மார்க்கம் இல்லை என்றே கூறவேண்டும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04