மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் அங்கு 65,900 க்கும் அதிகமானோர் தகவல்தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தில் காரணமாக 27,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை சுட்டிக்காட்டியுள்ளன.

வெள்ளத்தினால் ஏற்பட்ட மண்சரிவுகளில் 49 வீடுகள் சோதத்துக்குள்ளாகியுள்ளதுடன், 140 கட்டிடங்களும், 20 க்கும் மேற்பட்ட பாலங்களும் அழிவடைந்துள்ளன.

வாரத்தின் தொடக்கத்தில் மத்திய அமெரிக்காவை 'எட்டா' என்ற சூறாவளி தாக்கியது. இதனால் ஹொண்டுரஸில் மொத்தம் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல நாடுகளிலும் இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.