இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவருக்கு லிப்ட் தருவதாக கூறி காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனாலி அருகே அதிகாலை 3 மணியளவில் அருகில் உள்ள ஸ்பிட்டி வேலி பகுதிக்கு செல்ல வாடகைகாரிற்காக காத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்ணிற்கு அந்த பகுதியில் இலக்கத்தகடு இல்லாத காரில் வந்தவர்கள் லிப்ட் தருவதாக அழைத்துள்ளனர்.

அந்த காரில் பயணித்த 6 பேரில் இருவரே அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து காலை 10 மணியளவில் அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளித்துள்ளார்.மனாலி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் 3 வெளிநாட்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.