மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றத்தின் புதிய நீதவானாக ஷாலினி சதுரானி பெரேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நீதவான் ஷாலினி சதுரானி பெரேரா இதற்கு முன்னர் கம்பஹா மாவட்ட நீதிமன்றத்தின் மேலதிக நீதவானாக பணியாற்றி வந்துள்ளார்.

மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றத்தின் முன்னாள் நீதவானுக்கு எதிராக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த காரணத்தால் அவர்  பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.