நடிகர் போபி சிம்ஹா நடிப்பில் தயாராகும் 'வசந்த முல்லை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'வசந்தமுல்லை'. இப்படத்தில் நடிகர் போபி சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மிரா பர்தேசி நடிக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'வசந்த முல்லை'. இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும்' என்றார்.

போபி சிம்ஹாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் போபி சிம்ஹா எக்சன் அவதாரத்துடன் காட்சியளிப்பதால் அவருடைய ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதனிடையே நடிகர் போபி சிம்ஹா கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் இணைந்து '777 சார்லி' 'என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.