உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 232 வது படத்திற்கு 'விக்ரம்' என பெயரிடப்பட்டு, அதன் டீஸர் வெளியாகி இருக்கிறது.
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே 1986ஆம் ஆண்டில் 'விக்ரம்' என்ற பெயரில் வெளியான படத்தை தயாரித்து, நாயகனாக நடித்திருந்தார்.
அந்தப் படத்தின் ரீமேக் இது என்றும், அந்தப்படத்தின் அடுத்த பாகம் தான் இது என்றும் திரை உலகில் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குழுவினரோ,' இது முழுக்க முழுக்க உலகநாயகன் கமலஹாசன் நல்ல ஆவியாக வந்து சமூக விரோதிகளை வேட்டையாடும் எக்சன் கொமர்சல் திரில்லர் திரைப்படம்' என்கிறார்கள்.
இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பொஸ் என்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதன்போது படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான கமலஹாசனுடன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இசை அமைப்பாளர் அனிருத்தும் உடனிருந்தனர்.
உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வெளியாகி இருக்கும் 'விக்ரம்' படத்தின் டீசரை ரசிகர்கள் இணையத்தில் பாரிய அளவில் வரவேற்று வைரலாக்கி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM