logo

தொடர்ந்தும் தனிமைப்படுத்தலிலுள்ள பிரதேசங்களின் விபரம் இதோ..!

Published By: J.G.Stephan

08 Nov, 2020 | 01:52 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு  சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள  அனைத்து பிரதேசங்களிலும் நாளை திங்கட்கிழமை(09.11.2020) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று ஞாயிற்றுக்கிழமை(08.11.2020) அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் 12 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹாவில் 8 பொலிஸ் பிரிவுகளும், களுத்துறையில் இரு பொலிஸ் பிரிவுகளும் ஒரு கிராம சேவகர் பிரிவும் , குருணாகலில் இரு பொலிஸ் பிரிவுகளும், கேகாலையில் இரு பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படும்.


கொழும்பு
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளான மட்டக்குளி, முகத்துவாரம், புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், கரையோர பொலிஸ் பிரிவு, ஆட்டுப்பட்டித் தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

கம்பஹா
கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகமை, நீர்கொழும்பு, பமுணுவ, ஜாஎல, சபுகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

களுத்துறை
களுத்துறை மாவட்டத்தில் ஹொரன மற்றும் இங்கிரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளும் , வேகட கிராம சேவகர் பிரிவு என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும்.

குருணாகல்
குருணாகல் மாவட்டத்தில் குருணாகல் நகர எல்லை மற்றும் குளியாபிட்டி பொலிஸ் பிரிவு என்பவை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.

கேகாலை
கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை பொலிஸ் பிரிவு மற்றும் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

இதே வேளை கொவிட்-19 தொற்று பரவல் தொடர்பில் கடும் அனர்த்தத்துடனான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 வீடமைப்பு திட்டங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடமைப்பு திட்டங்களில் வாழும் மக்கள் வீடுகளுக்கிடையில் நடமாடுவது தவிர்த்து பயணங்களை வரையறுத்து தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மெத்சந்த செவன, மிஹிஜய செவன, மோதர ரன்மிண செவன, சிரிசந்த உயன தெமட்டகொட மற்றும் மாளிகாவத்தை என்.எச்.எஸ். வீடமைப்பு திட்டம் என்பவற்றுக்கு மேற்கூறப்பட்டவாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம்...

2023-06-09 21:41:14
news-image

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது...

2023-06-09 21:33:40
news-image

கொவிட் - 19 மற்றும் டெங்கு...

2023-06-09 21:27:47
news-image

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் -...

2023-06-09 20:42:16
news-image

குரங்குகளை பயங்கரவாதிகளாக கருத வேண்டும் -...

2023-06-09 20:12:04
news-image

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய்...

2023-06-09 20:27:48
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44...

2023-06-09 20:03:54
news-image

சீன சேதன பசளை கொள்வனவு தொடர்பான...

2023-06-09 19:57:17
news-image

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை...

2023-06-09 20:45:38
news-image

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை...

2023-06-09 16:39:43
news-image

யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு...

2023-06-09 17:02:51
news-image

வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை உருவாக்கிய...

2023-06-09 16:12:21